சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

0
817
man arrested sexual assault , malaysia tami news, malaysia, malaysia news, man arrested,

man arrested sexual assault }

மலேசியா: கெஞாலாங் பார்க் என்ற பகுதியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அவளிடம் கொள்ளையிட்டுச் சென்றதாக நம்பப்படும் 32 வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜாலான் மங்கீரீஸ் என்ற குடியிருப்பு பகுதியில், எண்ணிடப் படாத வீடொன்றில், இன்று அதிகாலை 12.10 மணிக்கு, அந்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலையாட்கள் தங்கும் அறையில் இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியின் அறை கதவை இரு ஆடவர்கள் எட்டி உதைத்து திறந்து கொண்டு உள்ளே புகுந்துள்ளார்கள் அவர்களில் ஒருவன், அந்தச் சிறுமியின் கைத்தொலைப்பேசி, மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றான்.

மேலும், ஒருவன் அந்தச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினான் என்று அச்சிறுமி போலீஸ் புகாரில் கூறியுள்ளதாக மாவட்ட போலீஸ் துணை ஆணையர் இங் ஆ லெக் கூறியுள்ளார்.

அந்தச் சிறுமியை அந்த ஆடவன் கற்பழித்துக் கொண்டிருந்த வேளையில், அவளின் நண்பன் அந்த அறைக்குள் நுழைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, அவ்விருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக இங் தெரிவித்துள்ளார்.

அச்சம்பவத்தின் போது, அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த ஆடவன், தனது அடையாள ஆவணத்தை தவற விட்டு விட்டுச் சென்று விட்டான். அந்த ஆவணத்தை வைத்து, போலீசார் அவனை கைது செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, அரசாங்க மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளாள்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவன், விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளான். அந்தச் சிறுமியிடம் கொள்ளையிட்டுச் சென்ற ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: man arrested sexual assault

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>