கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…

0
176
Steve Smith Set Play Canada T20 Tournament

(Steve Smith Set Play Canada T20 Tournament)

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கனடாவில் நடைபெறவுள்ள கிலோபல் இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆறு அணிகள் பங்கேற்கும் கிலோபல் இருபதுக்கு-20 தொடர் ஜுன் 28 முதல் ஜுலை 16ம் திகதிவரை கனடாவில் உள்ள 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருடம் தடை பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மற்றும் முக்கியமான உள்ளூர் தொடர்களில் விளையாட ஸ்மித், வோர்னர் மற்றும் பென்கிரொப்ட் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

எனினும் பென்கிரொப்ட் தற்போது உள்ளூர் தொடரொன்றில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக பிரபல்யம் பெறாத கிலோபல் இருபதுக்கு-20 தொடரில் ஸ்மித் விளையாடுவதற்கான வாய்புள்ளது என ஸ்மித்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

<<Tamil News Group websites>>