(instagram share posts feed stickers story link update)
இன்ஸ்டாகிராம் செயலியில் Feed போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட் மூலம் பயனரின் Feed இல் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி Feed போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் காணப்படும்.
நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
OUR GROUP SITES
instagram share posts feed stickers story link update