தமிழ் குடும்பத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்த அவுஸ்திரேலியர்கள்

0
777
Australia Tamil Family Deportation

Australia Tamil Family Deportation

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக குயின்ஸ்லாந்தின் பிலோயிலா வாசிகள், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சுமார் 98 ஆயிரம் பேரின் கையெழுத்துடன் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தை மீண்டும் பிலோயிலாவுக்கு அழைக்கும்படி கூறியே இம்மனு கையளிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகரில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் அவர்களது இரு பிள்ளைகளுடன் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் அண்மையில் அவர்களது வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தற்போது பிரிஸ்பேனில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்துவதா? இல்லையா? என வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே பிலோயிலா வாசிகள் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.