காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்கவேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0
442
Court ruled Management Authority should immediately Government

Court ruled Management Authority should immediately Government

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை இந்திய மத்திய அரசு உயர்நீதிமன் றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்றும் இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று அல்லது எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கபடுமா என்ற எதிர்பார்ப்ப எழுந்தது. இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு வரைவு திட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிற்பகல் 2 மணிக்கு காவிரி வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருவ காலத்திற்கு முன்னதாக வரைவு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை உயர்நீதிமன்றம் முழுமையாக ஏற்றுள்ளது.

மேலும், ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில்தான் செயல்படும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. மேலும் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

மாதந்தோறும் நீர் இருப்பு விவரத்தை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரவித்துள்ளது. நீர் இருப்பு விவரத்தை தெரிவிக்க முடியாது என்ற கர்நாடகவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில்தான் செயல்படும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. மேலும் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Court ruled Management Authority should immediately Government

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :