காஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்

0
625
Cases Violence Gaza Holy Pope condemned Tamil news

(Cases Violence Gaza Holy Pope condemned Tamil news)

காஸா எல்லையில் ,இடம்பெற்றுவரும், வன்முறைச் சம்பவங்கள் குறித்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென் பீட்டர் சதுக்கத்தில் விசேட திருப்பலி ஒன்றை ஒப்புக்கொடுத்த பாப்பரசர் இதற்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை காஸா எல்லையில் பலஸ்தீனர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில், இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது, பலஸ்தீனர்கள் 59 பேர் கொல்லப்பட்ட நிலையில் அவர் இக்கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான முடிவினை அறிவித்தபோது எருசலேமின் “நிலைமை” மதிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய கிழக்கில் ஏற்படும் பதற்றம் உலக நாடுகளுக்கிடையிலான மோதல்களை மேலும் அதிகரிக்கும் எனவும் பரிசுத்த பாப்பரசர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Cases Violence Gaza Holy Pope condemned Tamil news)

Related Articles