மருத்துவமனைகளில் CCTV அதிகரிப்பு!

0
174
Pairs government increase 1500 CCTV

பரிஸில் உள்ள பொது மருத்துவமனைகளில் 1,500 புதிய சிசிடிவி கேமராக்கள் இணைப்பதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை குறைக்கவும், மதிப்புமிக்க மருத்துவ உபகரணங்கள் மீது ஏற்படும் சேதத்தை தடுக்கவும் முடியும் என உயர்தர அதிகாரி ஒருவர் அறிவித்தார்.Pairs government increase 1500 CCTV

பிரெஞ்சு நாட்டின் தலைநகரத்தில் உள்ள 39 பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை ஆதாரங்களுக்கு சேதம் விளைவிக்கும் சவால்களை சமாளிக்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் CCTV கமராக்களின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் இந்த கமரா நடவடிக்கை மூலம் நாங்கள் எங்கள் மருத்துவமனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறோம்,” என்று பரிஸ் நகரின் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், கமராக்கள் கிட்டதட்ட 30 மில்லியன் யூரோ செலவாகும் என்று தெரிவித்தார்.

இந்த கமராக்கள் நோயாளர்கள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கியமான இடங்களில் மட்டுமே நிறுவப்படும். கோடைக்காலத்திற்கு முன்னர் சிசிடிவி கமராக்களை சோதிக்கும் திட்டங்களும், அதனால் நோயாளர்களின் மன நிலையை அறிந்து செயற்படவும் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

AP-HP தலைவர், “இவ் வகையான CCTV கமராக்கள் தற்போது விமான நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே, முதன்முறையாக இந்த கேமராக்கள் சுகாதார துறையில் சோதனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**