(bangalore royal challengers best Sunrisers Hyderabad news Tamil)
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது.
பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கோஹ்லி மற்றும் பார்த்திவ் பட்டேல் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, டி வில்லியர்ஸ் மற்றும் மொஹின் அலி அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி வில்லியர்ஸ் 39 பந்துகளுக்கு 69 ஓட்டங்களையூம், மொஹின் அலி 34 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையூம் பெற்றுக்கொடுக்க, அடுத்து களமிறங்கிய கிராண்டோம் 17 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 218ஆக உயர்த்தினார்.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரஷீட் கான் 27 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியும், சிறப்பான ஓட்ட குவிப்பில் ஈடுபட்டது.
கேன் வில்லியம்ஸனின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியூடன், வெற்றியை நோக்கி நகர்ந்த ஹைதராபாத் அணி, இறுதியில் 3 விக்கட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
ஹைதராபாத் அணிசார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வில்லியம்ஸன் 42 பந்துகளுக்கு 61 ஓட்டங்களை விளாசினார். மறுமுனையில் தனது பங்கிற்கு மனிஷ் பாண்டி 38 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த வெற்றியை பெற்றுக்கொண்ட பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலின் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன்இ பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
- மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>
bangalore royal challengers best Sunrisers Hyderabad news Tamil