(Sandeep Lamichhane added World XI team news Tamil)
இங்கிலாந்தில் எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள உலக பதினொருவர் மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டியில் நேபால வீரர் சந்தீப் லெமச்சேன் இணைக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் நேபால வீரர் ஒருவர் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நேபால தேசிய அணியில் விளையாடி வரும் 17 வயதான இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லெமச்சேன். இறுதியாக நடந்துமுடிந்த உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 13 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவரது சிறந்த பந்து வீச்சை கவனத்தில் கொண்ட டெல்லி அணி, அவரை ஐ.பி.எல். ஏலத்தில் வாங்கியிருந்தது. ஐ.பி.எல். தொடரில் விளையாடிய முதல் நேபால வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன், சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அவரின் இடத்துக்கு சந்தீப் லெமச்சேன் அழைக்கப்பட்டள்ளார்.
கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளியினால் கரீபியன் தீவுகளில் பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களை புனரைமைப்பதற்கு நிதிசேர்க்கும் முகமாக குறித்த கண்காட்சி போட்டித் தொடர் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>