புதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்

0
691
change google assistants voice android apple phone

(change google assistants voice android apple phone)
கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும்.

அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும்.

இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும்.

இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் — ப்ரிஃபரன்சஸ் — அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

change google assistants voice android apple phone