(28589 sri lanka army dead)
தற்காலத்தில் அனுபவித்து வரும் சுதந்திரத்துக்காக, 28 ஆயிரத்து 589 போர் வீரர்கள், தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனரென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
தேசியப் போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
“அனைத்து இலங்கையர்களும், தற்காலத்தில் அனுபவித்து வரும் சுதந்திரத்துக்காக, இராணுவத்தின் 23,962 பேரும் கடற்படையின் 1,160 பேரும், விமானப் படையின் 443 பேரும், பொலிஸில் 2,568 பேருரும், சிவில் பாதுகாப்புப் படையின் 456 பேரும், தாய் நாட்டுக்காகப் போராடும்போது, உயிர்த் தியாகம் செய்தனர்.
இவ்வாறாகப் பெறப்பட்ட வெற்றியை, குறுகிய நோக்கத்துக்காகவும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் பயன்படுத்தக் கூடாது” என்றும், இராணுவத் தளபதி, தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்வதற்காக, இராணுவத்தினரால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி தலைமையில், நாளை மறுதினம் (19), தேசிய இராணுவ ஸ்தூபிக்கு அருகில், தேசிய போர் வீரர்கள் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுமெனவும் அன்றைய தினமே, களனி ரஜமஹா விகாரையில், ஆலோக்க (விளக்கு) பூஜையொன்றும் மேற்கொள்ளப்படுமென, மேலும் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாளிகாவத்தையில் அதிர்ச்சி : குழந்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது, பெற்றோர் கைது
- ‘மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” : பலநாள் நூதன திருடன் சிக்கினான்
- கண்டி கலவரம் : திலும் அமுனுகமவின் கைத், தொலைபேசியை கைப்பற்றி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்
- இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்
- மே 18 ஆம் திகதி : கவலையளிக்கிறது என்கிறார் மஹிந்த
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:28589 sri lanka army dead,28589 sri lanka army dead
-
-