மாலிங்கவை நெருங்கும் என்ரு டை! : ஐ.பி.எல். தொடரில் புதிய சாதனை!

0
385
Andrew Tye new Bowling record IPL 2018

(Andrew Tye new Bowling record IPL 2018)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கட்டுகளை வீழ்த்தியதன் ஊடாக பஞ்சாப் அணியின் என்ரு டை புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாப் அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளரான என்ரு டை இம்முறை சிறந்த பந்து வீச்சினை பதிவுசெய்து வருகின்றார்.

இவர் இம்முறை விளையாடியுள்ள 13 போட்டிகளில் விளையாடி 24 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை என்ரு டை இந்த சீசனில் மூன்று தடவைகள் நான்கு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் ஒரு சீசனில் நான்கு விக்கட்டுகளை, மூன்று தடவைகள் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதேவேளை ஐ.பி.எல். தொடரில் நான்கு விக்கட்டுகளை அதிக தடவைகள் கைப்பற்றிய வீர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் அதிக நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மும்பை அணியின் லசித் மாலிங்க முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நான்கு விக்கட்டுகளை ஐந்து தடவைகள் கைப்பற்றியுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக லக்ஸ்மிபதி பாலாஜி, என்ரு டை ஆகியோர் நான்கு விக்கட்டுகளை நான்கு தடவைகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து புவனேஷ்வர் குமார் மற்றும் முனாப் பட்டேல் ஆகியோர் 3 தடவைகள் நான்கு விக்கட்டுகளை கைப்பற்றி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் என்ரு டை 16 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>