(Zee Tamil Sarigamapa Singer Contestant Ramaniyammal World Tour)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. திறமையான பாடகர்களை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடந்து முடிந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் பலரையும் ஈர்த்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.
தனது வயது முதிர்ந்த காலத்திலும் விடாமுயற்சியால் பல பாடல்களை அசாத்தியமாக பாடி இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தைத் தட்டிச்சென்றவர்.
குடும்பக்கஷ்டத்தால் தன தள்ளாத வயதிலும் வீடு வீடாக போய் வீடு வேலைகள் செய்து தன குடும்பத்தைப் பார்த்த ரமணியம்மாள் போட்டி நிறைவடைந்ததன் பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாட ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் சரிகமப மேடைக்கு வந்த ரமணியம்மாள், தான் வெகு விரைவில் இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளதாகவும் இதனால் தான் காலகாலமாக செய்து வந்த வீட்டு வேலைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாகவும் தனது கடைசி காலத்தை சந்தோசமாக பாட்டுப்பாடி கழிக்கவுள்ளதாகவும் கூறினார்.
Tag: Zee Tamil Sarigamapa Singer Contestant Ramaniyammal World Tour