எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க

0
883
Ranil Wickremesinghe next presidential candidate

(Ranil Wickremesinghe next presidential candidate)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவையும் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பணியகத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கிராம மட்ட மக்கள் சஜித் பிரேமதாஸவினால் கவரப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்தத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்தபட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாஸவிற்கு உள்ள ஈர்ப்பை கட்சியின் வெற்றிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர, பின்னர் ஒரு பாரிய பிரச்சார திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனையால் ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த பலர் குழம்பமடைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Ranil Wickremesinghe next presidential candidate