காசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்! 59 பாலஸ்தீனர்கள் பலி!

0
558
Gaza Border Israel Forces Violence Killed 59 Palestine People

(Gaza Border Israel Forces Violence Killed 59 Palestine People)

கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70–வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர். அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

Photo Source : sputniknews.com

இஸ்ரேல் படையினர் போராட்டகாரர்களை ஒடுக்கும் வண்ணம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 2 ஆயிரத்து 700 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்