பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!

0
760
college student threatened pay dentist doctor

college student threatened pay dentist doctor

பல் மருத்துவரை பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ் மற்றும் வைஷாலி தம்பதியினர், இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூரில் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கடந்த வாரம் பல் மருத்துவர் ஹரிஷை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 1 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார், அதற்கு மருத்துவர் ஹரிஷ் தன்னிடம் 10,000 ரூபாய்தான் இருப்பதாக கூறியுள்ளார்ம், இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உனது வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார், பிறகு நீ எனக்கு பணம் கொடுத்தே ஆகா வேண்டும் என்று கூறிவிட்டு நீ உன் மனைவியின் நகைகளை வைத்து எனக்கு 50,000 ருபாய் குடு என அந்த மார்ப நபர் கூற மருத்துவர் ஹரிஷ் அதற்கு ஒப்புக்கொள்கிறார், மேலும் இந்த விஷயத்தை போலீஸிடம் கூறினாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறியிருக்கின்றான்,

இது குறித்து மருத்துவர் ஹரிஷ் கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மிரட்டல் விடுத்த நபர்களின் குறித்த விபரங்களை சேகரித்த பின் இது குறித்து மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த நபர் குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சட்டக்கல்லூரி மாணவர் முருகனும் அவரது நண்பர் பாலாஜி என்பதும் தெரியவந்தது,

தொழிலதிபர்களை குறி வைத்து பணம் கேட்டு மிரட்டும் இவர்கள் அவர்களிடம் பேசும்போது ஆடியோ பதிவிட்டு பிறகு பேசிய பின் அந்த ஆடியோவை கேட்டு மகிழும் பழக்கம் உடையவர்கள் என கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்தனர்,

இதுவரை 25’க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது…..

More Tamil News

Tamil News Group websites :