இடையசைவால் கசையடி வாங்கிய இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்

0
772

(South Indian Actress Simran Re entry Film Industry)

90’களில் தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கியவர் சிம்ரன். சர்வ லட்சணமும் ஒருங்கே பெற்று தன் உடலழகு, இடையசைவால் இளைஞர்களை கிறங்கடித்தவர் தான் நடிகை.

முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட் படங்கள் என்று தான் சொல்லவேண்டும்.

சக நடிகைகளான லைலா, ஷாலினி, ரம்பா, ஜோதிகா மற்றும் ரோஜா இவர் திரைத்துறையில் இருந்த காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டவர்கள். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு தன் இடையசைவாலும் வசீகரப்புன்னகையாலும் கோடி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் சிம்ரன்.

இவர் நடித்த ஜோடி, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேர், ப்ரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால், படங்கள் இப்போதும் பேசப்படும் படங்களாக மாறியுள்ளன.

புடவை, சுடிதார், மாடர்ன் உடை, எந்த ஆடையிலும் பளிச்சென்று அழகாக தெரியும் இவர் அதிகம் நடித்த குடும்ப பாங்கான கதைகள் ரொம்ப பெரிய ஹிட்.

திருமணம் செய்து திரையில் ஒதுங்கி இருக்கும் சிம்ரனை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் தவமாய் காத்து இருக்கின்றனர். வயசானாலும் அழகில் சற்றும் குறைந்து போகாமல் இருக்கும் இடையழகி சிம்ரன் மீண்டும் நடிப்பில் கலக்குவாரா என்று ஏங்கியிருக்கின்றனர்.

Tag: South Indian Actress Simran Re entry Film Industry