(aircraft collided passenger airplane Turkey Tamil news)
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.
அந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியது.
கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைததோடு, தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் பயணிகள் விமான ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(aircraft collided passenger airplane Turkey Tamil news)
Image from Daily Mail
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீரழித்த பிரபல பிக்கு : அதிரடியாக சிக்கினார் : அரசியல் பலத்தால் நிகழ்ந்த கொடூரம்
- சீனாவின் வலையில் சிக்கியுள்ள இலங்கை : அம்பலப்படுத்தியது அமெரிக்கா
- பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்
- பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு கொழும்பில் நடந்த பரிதாபம் : ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்
- 16 பேரும் மஹிந்தவின் கீழ் களமிறங்க போகின்றோம் : அரசாங்கத்துக்கு பேரிடி