புகையிரத விபத்துக்களில் 180 பேர் உயிரிழப்பு

0
423
180 deaths train accidents

(180 deaths train accidents)
இந்த வருடத்தின் கடந்த ஐந்தரை மாதத்திற்குள் நாட்டில் ஏற்பட்ட புகையிரத விபத்துகளில் 180 நபர்கள் உயிரிழந்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர ப்ரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அநேகமான உயிரிழப்புக்கள் புகையிரதம் இயக்கத்தில் இருக்கும் போது புகையிரத கடவைகளில் வாகனங்களை செலுத்த முற்பட்ட போதே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தல், கையடக்க தொலைபேசியில் பேசிக்கொண்டு புகையிரத பாதைகளில் பயணித்தல், புகையிரதத்தின் மிதிபலகையில் பயணிக்கும் போது விழுதல், புகையிரதத்தில் ஏறும் போது கீழே விழுதல் ஆகிய விபத்துக்களால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 169 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த வருடம் புகையிரத விபத்துக்களில் 540 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர ப்ரேமரத்ன தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 180 deaths train accidents