(kanaa movie motion poster video)
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் சிவகார்த்திகேயன். இன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே வருகிறார்.
‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படத்துக்கு ‘கனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் Motion Poster தற்போது வெளியாகியுள்ளது.
Video Source: Sony Music India