தமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது

0
454
06 people including Eelam refugees arrested

(06 people including Eelam refugees arrested)
தமிழகத்தில் இருந்து இலங்கை;கு சட்டவிரோதமாக படகில் பயணித்த அகதிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச கடல் எல்லையில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பாக் ஜலசந்தி கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த பைபர் படகை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, படகில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் சென்ற திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 32 வயதுடைய சந்திரலேகா, 25 வயதுடைய சயன், 07 வயதுடைய சாதனா, சஜன் (பதினோறு மாத குழந்தை) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், இவர்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்ற இரண்டு படகு ஓட்டுநர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பயணித்த பைபர் படகையும் கைப்பற்றி காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது, தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள 2006 ஆம் ஆண்டு தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்றதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது இலங்கையில் யுத்தம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதை அடுத்து தாயகம் திரும்பி வந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று காலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து தமிழக நாட்டு படகில் பயணித்த பின்னர், நடுக்கடலில் இலங்கை மாதகல் பகுதியை சேர்ந்த பைபர் படகில் ஏறி யாழ்பாணம் வரும் வழியில் பைபர் படகில் ஏற்பட்ட எஞ்சின் பழுதால் நடுகடலில் நின்ற போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 06 people including Eelam refugees arrested