(oppo demos first 5g live 3d video call promises)
ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது குவால்காம் மற்றும் ஒப்போ 3D ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3D போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.
இதற்காக ஒப்போ R11S ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3D டெப்த் சேகரிக்கபடுகிறது.
பின்னர், இந்த தகவல்கள் டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், புதிய 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது.
இந்த 5G தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
OUR GROUP SITES
oppo demos first 5g live 3d video call promises