ஐந்து குழந்தைகள் பலி : அச்சத்தில் தெற்கு மக்கள்!

0
563
5 babies die southern province

(5 babies die southern province)
தென் மாகாணத்தினுள் பரவி வரும் ஒருவகை மர்ம வைரஸ் காய்ச்சல் காரணமாக தெற்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விசேடமாக இனங்காண முடியாத இந்த காய்ச்சல், குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் அதிகமாக இந்த காய்ச்சல் பரவியுள்ள நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த தினங்களில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 குழந்தைகள் இந்த மர்ம வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.

இதனால் நோயாளர்களை காண வருவோர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் அருணத சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :