(man arrested Singapore Katunayake cigarette smuggling Singapore)
சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 349 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபரிடம் இருந்த 15,400 சிகரட்கள் உள்ளடங்கிய 77 பொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் 770,000 ரூபா பெறுமதியுடையது என கணிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சிகரட்டுகளை அரசுடமையாக்கியதுடன் சந்தேக நபருக்கு 75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(man arrested Singapore Katunayake cigarette smuggling Singapore)
More Tamil News
- நவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
- மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு
- இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி
- மீனவர்களுக்கு நற்செய்தி; அமைச்சரவையில் முடிவு
- செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளார் மஹிந்த அமரவீர