மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்கள் யாழ் மருத்துவமனையில் அனுமதி

0
769
tamilnews jaffna two Tamil women drunken drive admitted hospital

(tamilnews jaffna two Tamil women drunken drive admitted hospital)

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்களான இரு பெண்களை மீட்டு பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராயில் இன்று (15) இரவு ஏழு மணியளவில் ஒரு ஸ்கூட்டி பெப்ட் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பெண்கள் அந்த வீதியால் பயணித்த பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.

இதன்போது இரு பெண்களும் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் அவர்கள் இருவரும் மது போதையில் இருப்பதை அறிந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீதியில் மது போதையில் நின்றிருந்த குறித்த இரு பெண்களையும் மீட்டனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் சோதித்துப் பார்த்ததில் அவர்கள் இருவரும் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் குறித்த பெண்கள் இருவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்கள் இருவரும் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும் தெரிய வருகின்றது.

இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews jaffna two Tamil women drunken drive admitted hospital)

More Tamil News

Tamil News Group websites :