(dog fever Singapore Passer Reese Faraway)
சிங்கப்பூர் பாசிர் ரீஸ் ஃபார்ம்வே (Farmway) வட்டாரத்திலுள்ள விலங்கு நிலையங்களில் நாய்க் காய்ச்சல் பரவி வருவதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், நோய் பரவுவதைத் தடுப்பதற்கு விலங்கு சார்ந்த நிலையங்கள் சுகாதார நடவடிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் அவற்றின் நாய்களை விலங்கு நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
நாய்க்காய்ச்சல் பற்றிய சில தகவல்கள்….
- – நாய்களைப் பாதிக்கும் ஒரு வகை காய்ச்சல்.
- – இருமல், சளி, காய்ச்சல், கண்களில் கசிவு ஏற்படுவது, பசியின்மை ஆகியவை அதன் அறிகுறிகள்
- – பாதிக்கப்பட்ட நாய்களின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் மற்ற உடல்நலப் பிரச்சினைகளை அது உருவாக்கலாம்.
- – நாய்க்காய்ச்சல் மனிதர்களைப் பாதிக்காது.
- – இருமல், தும்மல் ஆகியவற்றினால் நாய்க்காய்ச்சல் பரவக்கூடும்.
மற்றும் , பாதிக்கப்பட்ட நாய்களுடன் தொடர்புடைய பொருட்கள் மூலமாகவும் நாய்க்காய்ச்சல் பரவக்கூடும்.
tags:-dog fever Singapore Passer Reese Faraway
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**