அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

0
1057
Anwar release PKK Woman sari, malaysia tamil news, malaysia news, malaysia, PKK Woman,

{ Anwar release PKK Woman sari }

மலேசியா, மாமன்னரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகவிருக்கும் முன்னாள் எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்பதற்காக பி.கே.ஆர். கொடியினால் உருவாக்கப்பட்ட புடவை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தேவமலர் ஆறுமுகம் (வயது 45).

அன்வாரின் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக பலர் செராஸிலுள்ள புனர்வாழ்வு மருத்துவமனையில் வந்த நிலையில், அவர்களில் தேவமலர் சற்று வித்தியாசமாக காட்சியளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஷா ஆலமிலுள்ள ஒரு மின்னியல் தொழிற்சாலையில் வேலை செய்துவரும் தாம் விடுதலையாகவிருக்கும் அன்வாரை வரவேற்பதற்காக விடுமுறை எடுத்த செராஸ், புனர்வாழ்வு மருத்துவமனைக்கு காலை மணி 8.00 அளவில் வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான் அன்வார் நாளை விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

புடவை இந்தியர்களின் பாரம்பரியத்தின் அடையாளம். ஆட்சி மாற்றம் மற்றும் புதிய அரசாங்கம் அமைந்துள்ளதை நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். அதனால்தான், அன்வாரின் விடுதலையின் போது புடவையில் வர வேண்டுமென தாம் முடிவெடுத்ததாக மேடை நாடக கலைஞருமான தேவமலர் கூறியுள்ளார்.

அன்வார் நாளைதான் விடுதலையாகவிருப்பதால் நாளை மீண்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு இதே புடவையில் அவரை வந்து சந்திக்கலாமா என யோசித்து வருவதாக 4 பிள்ளைகளுக்கு தாயுமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Anwar release PKK Woman sari

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

<<Tamil News Groups Websites>>