பிளே-ஆஃப் சுற்றின் வாய்ப்பு யாருக்கு? : கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று மோதல்!

0
271
kolkata knight riders vs rajasthan royals 2018

(kolkata knight riders vs rajasthan royals 2018)

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐந்து அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கின்றன.

பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளன. அதிலும் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக அமையும்.

இந்நிலையில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் போட்டி போட்டுக்கொண்டுள்ள ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இன்றைய போட்டியின் வெற்றி முக்கியமாக அமைந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 3வது இடத்தை பிடித்திருந்தாலும் இன்று வெற்றிபெற்றால் மாத்திரமே அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். தோல்வியடைந்தால் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிடும்.

தொடரை தக்கவைக்க வேண்டுமானால் இரு அணிக்கும் இன்றைய போட்டியின் வெற்றி முக்கியம்.

இரு அணிகளுக்கும் இடையில் ஜெய்பூரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி அழுத்தத்திற்கு மத்தியில் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

அணி விபரங்களை பொருத்தவரையில் ராஜஸ்தான் அணியில் ஆர்சி ஷோர்டுக்கு பதிலாக சோதி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கொல்கத்தா அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

<<Tamil News Group websites>>