Southwest airline emergency landing
விமானத்தினுள் அமுக்கம் குறைந்தமையால் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று டலஸில் இடம்பெற்றுள்ளது.
சவுத் வெஸ்ட் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
டென்வரிலிருந்து, டலஸ் நோக்கிப் பயணித்த குறித்த விமானத்தின் உள்ளே அமுக்கம் குறைந்துள்ளது.
இதனையடுத்து சுவாசிப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது விமானத்தினுள் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தரையிறங்குவதற்கு சுமார் அரை மணித்தியாலத்துக்கு முன்னரே சுவாசிப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பின்னர் டலஸ் லவ் பீல்டில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்கள், ஒரு மாதத்திற்குள் பயணங்களின் போது பாதிக்கப்படும் மூன்றாவது தடவை இதுவாகும்.