ஏலத்தின் போது கோடிகளில் மிதந்து போன போப் பிரான்சிஸ் கார்

0
347
pope francis huracan auction proceeds donated charity

(pope francis huracan auction proceeds donated charity)
போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்களுக்கு (இலங்கை மதிப்பில் ரூ.13.49 கோடிக்கு) விற்பனையாகியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆட்டோமொபில் லம்போர்கினி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் அந்த காரில் தனது கையெழுத்தினை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மான்ட் கார்லோவில் மே 12-ம் திகதி நடைபெற்ற ஏலத்தில் RM Sotheby எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. முன்னதாக பலமுறை வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இந்நிறுவனம் ஏலத்தில் விற்றிருக்கிறது. அந்த வகையில் போப் பிரான்சிஸ் லம்போர்கினி டாப் 10 பட்டியில் இடம்பிடித்துள்ளது.

ஏலத்தொகை மொத்தமும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இடம் வழங்கப்பட்டு, இவை பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட இருக்கிறது. இந்த தொகையின் ஒருபங்கு போப் ஜான் XXIII சமூகத்திற்கு வழங்கப்படும், இந்த சமூகம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

pope francis huracan auction proceeds donated charity