கம்பளையில் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
609
man body recovered river

(Man body recovered river)
கம்பளை மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 79 வயதுடையவர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம். ஜெயசேன என்ற 79 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆற்றில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்ற கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

இதன்பின்னர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இவர் இன்றைய தினம் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பல கோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; man body recovered river