மனநல சிகிச்சைக் கூடம் அமைப்பு- பரிஸ் தாக்குதல்!

0
596
Paris attack person Khamzat Azimov related details release

மே 12 மாலை பரிஸ் மத்திய பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் நாலா திசைகளிலும் சிதறி ஓடியுள்ளனர். இத் தாக்குதலில் அதிர்ச்சியடைந்தவர்களுக்காக மனநல சிகிச்சைக் கூடம் ஒன்று Hôtel Dieu இல் நிறுவப்பட்டுள்ளது. Paris attack person Khamzat Azimov related details release
தாக்குதலில் அதிச்சியடைந்தவர்கள் கண்டிப்பாக இங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் பெயர் Khamzat Azimov ஆகும். 21 வயதுடைய இவன் ரஷ்யாவின் Chechnya நகரில் 1997 ஆம் ஆண்டு பிறந்துள்ளான். இவனுக்கு 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 18 ஆம் வட்டாரத்தில் உள்ள இவனது வீடு, சனிக்கிழமை இரவு முற்றாக சோதனையிடப்பட்டதோடு, பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிரியாவில் உள்ள பயங்கரவாதி ஒருவனுடன் Khamzat Azimov தொடர்பில் இருந்ததால் கிட்டதட்ட ஒரு வருடத்துக்கு முன்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தான்.. இதனாலேயே இவன் காவல்துறையினரின் S கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான்.

தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் Gérard Collomb, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தன் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு நேரடியாக விஜயம் செய்த பிரதமர் எத்துவா பிலிப், தாக்குதலுக்கு உள்ளான நபர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களை தெரிவித்ததோடு, துரிதமாக செயற்பட்ட காவல்துறையினருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும், காவற் துறையினருக்கு ஜனாதிபதி மக்ரோன் நன்றிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**