(Bigg Boss 2 Latest Update Sripriya quiz)
கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய ”பிக்பாஸ்” நிகழ்ச்சி செம வரவேற்பு பெற்றதையடுத்து, இந்த ஆண்டும் அடுத்த மாதம் முதல் ”பிக்பாஸ் 2” நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரொமோ டீசரை கமல் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
சர்ச்சைகளோடு கடந்த ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் ஆரவ் வெற்றியாளர் ஆனார். பிக்பாஸ் முதல் சீசன் பற்றி தினசரி கருத்து தெரிவித்து வந்த ஸ்ரீபிரியா இந்த ஆண்டும் கருத்து சொல்லட்டுமா என ட்விட்டரில் கேட்டுள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பானபோது தினசரி நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தார் ஸ்ரீபிரியா. காயத்ரி, ஜூலி, ஆர்த்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 பற்றியும் தொடர்ந்து கருத்துகள் கூறட்டுமா எனக் கேட்டுள்ளார்.
“நண்பர்களே… BiggBoss2 ஆரம்பிக்க உள்ளது, சென்ற முறை என் கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். இம்முறையும் பகிர்ந்து கொள்ளவா? உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.. நம் கமல் சாரின் கருத்துக்கு இம்முறை எதிர்வினை முன்பை விட கூடுதலாக வரும்.. அதற்கான பதிலும் நம் விரலில் இருப்பது அவசியம். என ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், கருத்துக்கள் அவரவருடையது தாராளமாக சொல்லலாம் மேடம். நம்மவரே தவறு செய்தாலும் நம் கருத்தை தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார்.
“வேண்டாம் மேம்..!! அப்போ நீங்க ஒரு பார்வையாளரா விமர்சனம் வச்சீங்க!! இப்போ உங்க ஃபாலோவர்ஸ் அரசியலுக்காக வந்திருப்பாங்க!! அவ்வளவு சரியா இருக்காது.
அதுமட்டுமல்லாமல், கருத்தை பகிர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த முறை கமல் சாரை பிஜேபியை எதிர்த்து பேச சொல்லுங்க என ஒருவர் கூறியுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!
* பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!
* புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!
* விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!
* இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!
* நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!
* கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!
* தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!
Tags :-Bigg Boss 2 Latest Update Sripriya quiz
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலா வந்த ஐஸ்