வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீரழித்த பிரபல பிக்கு : அதிரடியாக சிக்கினார் : அரசியல் பலத்தால் நிகழ்ந்த கொடூரம்

0
6915
sigiriye damminda thero sexual abuses

(sigiriye damminda thero sexual abuses)
பிரபல பிக்கு ஒருவர், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வீடுகளுக்குள் பலாத்காரமாக புகுந்து குடும்ப பெண்களை கணவன் எதிரே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு விகாரைகளுக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் சீகிரிய -நாகலவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் உறுப்பினருமான சீகிரியே தம்மிந்த தேரரே இவ்வாறு பெண்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

சீகிரிய -நாகலவெவ பகுதியில் உள்ள மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் விகாரைக்கு தானம் கொண்டு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணை தம்மிந்த தேரர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த பிக்கு இதற்கு முன்னரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளதுடன் அப்போது அவர் தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியில் அங்கம் வகித்த காரணத்தினால், கிடைத்த அரசியல் ஆதரவை பயன்படுத்தி, நாகலவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் தனது அரசியல் பலத்தை காட்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணின் கணவனை திட்டி, தொடர்ந்தும் பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

மிகவும் வறிய நிலையில் வாழும் இந்த குடும்பத்தினர் காவி உடைக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் தேரரின் அரசியல் பலத்தின் மீதுள்ள அச்சம் காரணமாக பொறுமையாக இருந்துள்ளனர்.

பிக்குவால் தொடர்ந்தும் கொடுக்கப்படும் தொல்லை தாங்க முடியாது அது குறித்து சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மை தொந்தரவு கொடுக்காது வாழ விடுமாறு பிக்குவிடம் கூறுமாறு இந்த குடும்பத்தினர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

ஏன் அப்படி கூறுகிறீர்கள் என பொலிஸார் கேட்ட போது, சம்பவங்கள் குறித்து குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் பிக்குவை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிக்கு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளது.

இந்த நிலையில், சீகிரிய -நாகலவெவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாய், கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மதியம் தானத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அப்போது சந்தேக நபரான பிக்கு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக பெண் சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸ் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

பிக்கு இதற்கு முன்னர் இதே குற்றத்தை செய்துள்ளதை கவனத்தில் கொண்டு அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
பிக்குவின் இந்த செயலால் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags:sigiriye damminda thero sexual abuses, sigiriye damminda thero sexual abuses