முதலமைச்சர் – பல்கலை மாணவர்கள் சந்திப்பு தீர்வு எட்டப்படாமல் நிறைவு!

0
506
tamilnews jaffna campus students chief minister discusstion

(tamilnews jaffna campus students chief minister discusstion)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சார்ந்த குழுவினருக்கும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்ந்த சில பொது அமைப்புகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல் இம் மாதம் 18ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. குறித்த நினைவேந்தலை வடமாகாணசபை கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நடாத்திவருகிறது.

இந்நிலையில், இம்முறை நினைவேந்தலை நடாத்தும் பொறுப்பை தங்களிடம் வழங்கவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் அதனை வடமாகாண சபை ஆரம்பத்தில் நிராகரித்தது.

அதன் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து நடாத்தும் தீர்மானத்தை எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பொது அமைப்புக்கள் சில பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடாத்தியிருந்தார்கள்.

அதற்கமைய இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்தையின் போது தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நாளைய தினம் முள்ளிவாய்க்காலில் மீண்டும் சந்தித்து 2 ஆம் கட்டப் பேச்சுவாரத்தையை நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(tamilnews jaffna campus students chief minister discusstion)

More Tamil News

Tamil News Group websites :