(Sri Lanka test squad vs West Indies 2018 news Tamil)
மே.தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கைக்குழாமை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் மே.தீவுகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அங்கு செல்லவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அணிக்குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அணிக்குழாமில் உபாதைக்குள்ளாகியிருந்த எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுராங்க லக்மால் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்தகுதியை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் குழாமில் அறிமுக வீரர்களான மஹேல உடவத்த, கசுன் ராஜித, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அஷித பெர்னாண்டோ ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் குசல் பெரேரோவும் அணிக்குழாமில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதற்காக வாய்ப்பை வேண்டாம் என தெரிவித்திருந்தார். தற்போது டெஸ்ட் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டிருந்த துஷ்மந்த சமீர, சந்தகன், திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
தினேஷ் சந்திமால் (தலைவர்), மஹேல உடவத்த, குசால் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, எஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, லஹிரு கமகே, கசுன் ராஜித, சுராங்க லக்மால், லஹிரு குமார, அஷித பெர்னாண்டோ
- இன்று ஆரம்பமாகிறது வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி!!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>
Sri Lanka test squad vs West Indies 2018 news Tamil