ஈரான் பயணமானார் ஜனாதிபதி

0
494
president maithripala sri sena visit Iran today economic development

president maithripala sri sena visit Iran today economic development
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம்; ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஈரான் நோக்கி பயணித்துள்ளார்.

இன்று முற்பகல் 11.50 அளவில் அவர் ஈரான் நோக்கி பயணமானதாக எமது கட்டுநாயக்க வானுர்தி தள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹசான் ரவுஹானியின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு செல்கிறார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை ஈரானுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை விருத்தி செய்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கிடையேயான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தி கொள்வதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் வணிக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட முதலீட்டு மற்றும் வர்த்தக சந்திப்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
president maithripala sri sena visit Iran today economic development

More Tamil News

Tamil News Group websites :