சீரற்ற கால நிலை நீடிக்கும் என்கிறது வானிலை அவதான நிலையம்

0
452
present weather situation continue one week meteorology department

present weather situation continue one week meteorology department
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அம்பாறை , மட்டக்களப்பு , குருணாகலை போன்ற மாவட்டங்களில் சுமார் 100 மில்லி மீற்றர அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
present weather situation continue one week meteorology department

More Tamil News

Tamil News Group websites :