police handled law order kidnapping case sunderararajan accused
தமிழகத்தில குழந்தை கடத்தல் சம்பவத்தில் சட்டம்- ஒழுங்கை பொலிஸார் சரியான முறையில் கையாளவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலம் இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது. யூகத்தின் பேரில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவதும் சரியானது அல்ல.
சட்டத்தை யாரும் தன் கையில் எடுக்க கூடாது அது தவறு. எதனால் இது நடைபெறுகிறது என்றால் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சட்டத்தை கையில் எடுப்பதாக கருத வேண்டி உள்ளது.
மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அளவுக்கு பொலிஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.
வட மாநிலத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருக்கலாம். அதனால் காரணம் இன்றி தாக்கக் கூடாது.
பொலிஸார் மீதும் அரசு மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கின்றனர். இதை தவிர்க்க வட மாநிலத்தவர் விவகாரத்தில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை பொலிஸாருக்கு உள்ளது. அதை முறையாக கையாளவில்லை.
குழந்தை கடத்தல் பீதியில் படுகொலை செய்யப்பட்ட வயோதிபப் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் தங்கி இருப்பவர்கள் பற்றிய முழு விவரமும் பொலிஸாரிடம் இருக்க வேண்டும்.
என்ன வேலைக்காக வந்துள்ளனர். எங்கு தங்கியுள்ளனர். அவர்களது பின்னணி போன்ற முழுமையான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் கையாள முடியும்.
ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதையொட்டி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதாக கூறினாலும் அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுக்க கூடாது.
எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை பொலிஸாருக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
police handled law order kidnapping case sunderararajan accused
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com