‘பேப்பர் பாத்திரத்தில்’ தேநீர் தயாரிக்கும் நபர்

0
511
More Tamil News வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம் யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம் மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு Tamil News Group websites : Technotamil.com Tamilhealth.com Sothidam.com Sportstamil.com Cinemaulagam.com Ulagam.com Tamilgossip.com timetamil.com

person Indian state Telangana prepared paperwork

இந்திய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பேப்பர்பாத்திரத்தில் தேநீர் தயாரித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அடிலாபாத் மாவட்டத்திலுள்ள சந்தா கிராமத்தில்  தேநீர் கடை வைத்திருக்கும் அன்னுகா அன்னுபையா (வயது 55) என்பவர் தன்னிடம் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு பேப்பர் பாத்திரத்தில் தேநீரைத் தயார் செய்து கொடுத்து வருகின்றார்.
பேப்பர் பாத்திரத்தில் எப்படி தேநீர் தயாரிக்கும் குறித்து அன்னுபையா கூறியதாவது:

6 அடி அகலமும் நீளமும் கொண்ட செய்தித்தாளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரம்போல் செய்து கொண்டு காற்றுபுகாத வகையில் காட்டுமுள்கள் கொண்டு நான்கு மூலைகளையும் குத்திவிட வேண்டும்.

இந்த வகையான பேப்பர் பாத்திரத்தைச் செய்வதற்கு காட்டுமுள் (ஆங்கிலத்தில் அகாசியா தார்ன்ஸ், அம்பர்லா தார்ன்ஸ்) இந்தப் பேப்பர் பாத்திரம் செய்வதற்கு இந்த வகையான முட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்தப்பாத்திரத்தை அந்த முட்கள் கொண்டு காற்றுப்புகாத வகையில் இணைத்து பேப்பரும் நெருப்பில் எரிந்துவிடாமல் குத்திவைக்க வேண்டும்

அதன்பின் 60 மில்லி பாலை அந்த பேப்பர் பாத்திரத்தில் ஊற்றி தேநீர்தூள் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து தேநீர் தயாரிக்கலாம். ஆனால் வழக்கான அடுப்பிலும் நெருப்பிலும் இல்லை.

மாறாக கிராமங்களில் பயன் படுத்தப்படும் ஊதுகுழல் மூலம் மெல்லிதான நெருப்பு வரும் அடுப்பில் இந்தக் காகித பாத்திரத்தைவைக்க வேண்டும். அவ்வப்போது நெருப்பு மேலே வரும் வகையில் வாயின் மூலம் காற்றை செலுத்திபாத்திரத்தை சூடாக்க வேண்டும். அதிகமான நெருப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் குத்தியிருக்கும் முட்கள் மூலம் நெருப்பு பட்டு சூடாகி, பாலும் சூடாகத் தொடங்கும். அதன்பின் பால் கொதிநிலையை அடைந்து தேநீர் தயாராகும். இந்த வகையான பேப்பர் பாத்திரம் மூலம் அதிகபட்சம் 70 மில்லி தேநீர் தயாரிக்க முடியும்.

பால் கொதிநிலையை அடையும் போது, பாத்திரத்தை ஈரமாக்கும். அதைத் தவிர்க்கும்வகையில் அவ்வப்போது நெருப்பை அதிகமான கொண்டுவந்தால் காகிதப் பாத்திரம் ஈரமாகாது.

இதுபோன்று பேப்பர் பாத்திரத்தில் தேநீர் தயாரிக்கும் முறையை நான் பொழுதுபோக்காகவே செய்து வருகிறேன். இதற்காக நான்யாரிடமும் பணம் வாங்குவதில்லை. ஏறக்குறைய 5 நிமிடங்களில் பேப்பர் பாத்திரத்தில் தேநீர் தயாரிக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

person Indian state Telangana prepared paperwork

More Tamil News

Tamil News Group websites :