நேற்று Nanterre-Université RER நிலையம் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Nanterre-Université RER station attack 14 mask persons
முகமூடி அணிந்து வந்த 14 நபர்கள் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிலையத்துக்குள் நுழைந்த நபர்கள், அங்குள்ள LED திரைகள், கணனிகள், ATM இயந்திரங்கள் என பலவற்றை அடித்து நொருக்கியுள்ளனர். மொத்தமாக இரு ATM இயந்திரங்களும் 6 LED திரைகளும் மேலும் சில கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.
அங்குள்ள Nanterre-Université கல்லூரி கடந்த 3 வார காலமாக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பல வன்முறைகளும், கல்லூரிக்கு வெளியே பல கலவரங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால், அங்கு வந்த காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து, Nanterre-Université நிலையம் முற்றாக அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராவின் மீதும், வேறு இடங்களிலும் வர்ண ஸ்பிரேக்கள் அடித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி
- Google சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்!