“மீண்டு வருவோம்” : உணர்ச்சிவசமான காணொளியை வெளியிட்ட ஏபி டி வில்லியர்ஸ்!

0
531

(AB de Villiers Emotional Message RCB Fans)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் உணர்ச்சிகரமாக பேசிய காணொளியொன்றை, பெங்களூர் அணி தங்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இம்முறை நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரை பொருத்தவரையில் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருக்கின்றது.

அணியின் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் பெங்களூர் அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் அணியின் இந்த மோசமான நிலை குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

வில்லியர்ஸ் குறிப்பிடுகையில் “ இன்று நாம் டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ளோம். இன்னும் நான்கு போட்டிகள் இருக்கின்றன. அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு அணி தள்ளப்பட்டுள்ளது.

இனி நாம் எதிர்கொள்ளவுள்ள நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என அணி நிர்வாகம், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் இந்த சீசனில் சிறப்பாக செயற்படவில்லை. அணியும் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். மீதமுள்ள போட்டிகளில் மீண்டு வருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

<<Tamil News Group websites>>