(maithripala sirisena fonseka issue)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் ஜனாதிபதியிடம், அமைச்சர் சரத் பொன்சேகா மன்னிப்பு கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், தான் அவ்வாறு மன்னிப்பு கோரவில்லை என அமைச்சர் சரத்பொன்சேகா நேற்று முன்தினம் மறுப்பு வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித் சேனாரத்தன,
ஜனாதிபதிக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரினார் .
பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தியது தவறு என்று சரத் பொன்சேகா கூறிய கருத்துக்கே மன்னிப்புக் கோரியதாக” அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறு சீரமைப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி தொடர்பாக விமர்சனங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்யின் முக்கிய அமைச்சர்கள் தமது ; அதிருப்தியை வெளியிட்டிருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டும் இருந்தனர்.
மேலும் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் ரணிலிடம் கோரிக்கை விடுத்தனர்.
சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் தானும் அதிருப்தியடைந்ததாகவும் நான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்றேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா? : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்
- யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!
- ‘குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- எரிபொருளை பதுக்க முயற்சித்த விநியோகஸ்தர்களின் கனவு பலிக்கவில்லை
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:maithripala sirisena fonseka issue,maithripala sirisena fonseka issue
-