நாட்டை உலுக்கிய கடத்தல்: கடத்தப்பட்ட சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்!

0
634
Mudgeeraba Missing Boy Found

Mudgeeraba Missing Boy Found

‘Mudgeeraba’ விலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 12 வயது சிறுவனை குயின்ஸ்லாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஒலிவர் யாங், என்ற குறித்த சிறுவன் நிவ் சவுத் வேல்ஸின் கிரப்டன் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவனின் கடத்தலுடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் கடும் நீல நிற ஜீப்பை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவ்விசாரணைகள் தொடர்பில் 53 வயது நபரொருவர் உதவி புரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கருத்துப்படி, ஜீப்பில் வந்த சிலர் குறித்த சிறுவனை அதற்குள் இழுத்து உள்ளே எடுத்துள்ளனர்.

குறித்த சிறுவன் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வரும் போது, வீட்டின் வெளியே வைத்தே கடத்தப்பட்டிருந்தான்.