Edappadi Palanisamy said ridiculous speak link between rivers rivers
இன்று புதிதாக முளைக்கும் தலைவர்கள் நதிகள் இணைப்பு குறித்து பேசுவது வேடிக்கையானது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடத்திலேயே ஆதரவு பெருகி வருகின்றது என்பதற்கு வீதியோரங்களில் மக்கள் கூடி நின்று வரவேற்பு அளிப்பது எடுத்துக்காட்டாகும். நீர் ஆதாரத்தை பெருக்குவதிலும் கிடைக்கின்ற நீரை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் அ.தி.மு.க. அரசு கவனமாக நடந்து கொள்கிறது.
மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டுதான் அரசு பணியாற்றி வருகிறது. நீர் என்பது உயிருக்கு மேல் என கருதி ஒவ்வொரு துளி நீரையும் தங்கம் போல சேமிக்க வேண்டும்.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதால் தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகி வருகிறது. தமிழகம் கல்வி, மருத்துவம், உணவு தானிய உற்பத்தி என அனைத்திலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மக்களுக்கு தடையில்லாத குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
தற்போது பல பேர் புதிது புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கட்சித் தொடங்குவதைப் பற்றி எந்த வேறுபட்ட கருத்தும் எங்களுக்கு கிடையாது. ஆனால், இதுநாள் வரை என்ன செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை.
இன்றைக்கு நதிகளை இணைக்க வேண்டும் என கூறுகின்றனர். காலம்போன காலத்தில் நதியை இணைக்க வேண்டும் என சொல்கிறார்கள்.
ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி அது முடிகின்ற தருவாயில் தற்போது புதிதாக பல தலைவர்கள் முளைத்து சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய இயக்கம் அ.தி.மு.க.வும் அ.தி.மு.க. அரசும்தான். பல்வேறு எதிர்க்கட்சிகள் அரசு மீது குற்றம்சுமத்துகின்றன. அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு முன்னோடி துறையாக சிறப்பாக செயல்படும் அரசாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy said ridiculous speak link between rivers rivers
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :