Modi requested large number voters Karnataka elections
இந்திய கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும்படி இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து நடைபெற்றுவருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும்இ கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரச பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கர்நாடகாவில் வாழும் என் சகோதர சகோதரிகள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தவறாமல் வாக்களித்து தங்கள் பங்களிப்புடன் இந்த ஜனநாயக திருவிழாவை சிறப்படைய செய்ய வேண்டும்” என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
Modi requested large number voters Karnataka elections
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு