சவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்திற்கு கின்னஸ் சாதனை விருது!

0
622
50 million trees olive garden Saudi Guinness Award Tamil news
Close-up of black olives ripening on the tree.

(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news)

சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் தோட்டத்திற்கு உலகின் மிகப்பெரிய நவீன ஆலிவ் தோட்டம் என்ற அங்கீகாரத்துடன் கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தை அல் ஜோஃப் விவசாய மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது. (Al Jouf Agricultural Development Company has received a certificate of merit from The Guinness World Records as the largest modern olive plantation in the world)

சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற தொடர் முயற்சியின் விளைவாக இப்பிரமாண்ட தோட்டம் சாத்தியமாகியுள்ளதுடன் ஆண்டுக்கு சுமார் 15,000 டன் ஆலிவ் எண்ணெய் உற்பத்தியையும் இங்கு விளையும் ஆலிவ் மூலம் பெறப்படுகிறது. இது சவுதி அரேபியாவின் ஆலிவ் எண்ணெய் தேவையில் சரிபாதி மட்டுமே.

சுகாகா நகரம் கடந்த 4,000 வருடங்களாகவே வரலாற்று பக்கங்களில் ஆலிவ் மற்றும் பேரீட்சை விவசாயத்தில் சிறந்து விளங்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அல் ஜோஃப் விவசாய மேம்பாட்டு நிறுவனம் தனது திட்டத்தின் அடுத்த பகுதியாக, ஆலிவ் எண்ணெயிலிருந்து இயற்கை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் உறுகாய்களை தயாரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news)

More Tamil News

Tamil News Group websites :