(Iravukku Aayiram Kangal Movie Review Tamil Cinema)
இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.(Iravukku Aayiram Kangal Movie Review Tamil Cinema)
அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
அதன் பின்னர் நடந்தது பற்றி அருள்நிதி யோசிக்க, பிளாஸ்பேக் செல்கிறது. கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் வேலை பார்க்கும் மஹிமாவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் இரவில் மஹமாவை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடமிருந்து மஹிமாவை, அஜ்மல் காப்பாற்றி அனுப்புகிறார்.
பின்னர் மீண்டும் அஜ்மலை சந்திக்கும் மஹிமா, தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூற, அஜ்மல் அவளை அடைய நினைத்து, தவறாக பேசுகிறார். இதையடுத்து அஜ்மலை அடித்து விட்டு மஹிமா அங்கிருந்து சென்றுவிடுகிறாள். தொடர்ந்து அஜ்மல், மஹிமாவை தொந்தரவு செய்ய, அதனை தனது காதலரான அருள்நிதியிடம் மஹிமா கூறுகிறாள். அப்போது, கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் சாயா சிங்கை அருள்நிதி காப்பாற்றுகிறார்.(Iravukku Aayiram Kangal Movie Review Tamil Cinema)
சாயா சிங், அஜ்மல் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் கூற, அஜ்மலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் அருள்நிதி. இதையடுத்து அஜ்மல் வீட்டிற்கு செல்லும் அருள்நிதி, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். பின்னர் போலீஸ் தன்னை கைது செய்ததும், தான் தப்பித்ததும் அவருக்கு நினைவுக்கு வருகிறது.
கடைசியில் சுஜா வருணியை கொலையை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீசிடம் இருந்த தப்பித்த அருள்நிதி கொலையாளியை கண்டுபிடித்தாரா? கொலைக்கு நடுவே சந்தேகப்படும் அந்த ஆயிரம் கண்கள் தான் படத்தின் மீதிக்கதை.
மஹமா நம்பியாருடன் காதல் காட்சிகளில் அருள்நிதி எதார்த்தமாக, அழகாக நடித்திருக்கிறார். அதேநேரத்தில் தனது காதலிக்கான பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, பரபரப்பான சூழலில் கோபம் கலந்த தேடலிலுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மஹமா நம்பியார் திரையில் அழகு தேவதையாக வந்து கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அஜ்மல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
இரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு சாதாரண மனிதன் ஒருவன் சிக்குகிறான். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர, அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறான்.
அதேநேரத்தில் அதில் பல முடிச்சுகள் இருக்க, அதனை அவன் எப்படி எதிர் கொண்டான். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவனை கண்டுபிடித்தானா என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்தின் கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் தொடர்ந்து பல டுவிஸ்டுகள் வருவது ரசிகர்களுக்கு குழப்புத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் இரவை வெளிச்சம்போட்டு காட்டுப்படியாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ”இரவுக்கு ஆயிரம் கண்கள்” கவனம் தேவை என்பது உறுதி…!
News Source : cinema.maalaimalar
<<MOST RELATED CINEMA NEWS>>
* காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)
* படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!
* இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!
* அஜய் தேவ்கான் – கஜோல் குடும்பத்தில் பிளவு : இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!
* விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!
* நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)
* வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!
* நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!
* ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!
Tags :-Iravukku Aayiram Kangal Movie Review Tamil Cinema
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
சூப்பர் சிங்கரில் மையம் கொண்டுள்ள இசைப்புயல்! கண் கலங்கிய விஜய் குடும்பம்