Florida Hotel Shooting
புளோரிடாவில் ஹோட்டலொன்றில் பெண்ணொருவரும், அவரது காதலனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இக்கொலைகளை புரிந்தவர் அப்பெண்ணின் பிரிந்த கணவன் என தெரிவிக்கப்படுகின்றது.
இருவரையும் கொலை செய்த அவர் அதன் பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த கணவன் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான மார்க் ஸ்டோக்ஸ் , அலபாமாவில் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பிரிந்த மனைவியும் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், 28 வயதான அமாண்டா என்ற அவர் சம்பவத்தின் போது தனது காதலனான 30 வயதான கெனித் குரோஸுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்க்குக்கும் , அமாண்டாவும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்வதாகவும், இருவருக்கும் 5 வயதில் மகளொருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தன்று ஹோட்டல் அறையின் சாவியை பெற்றுக்கொண்டு அங்கு சென்றுள்ள அவர், இருவரையும் சுட்டுக்கொண்டுள்ளார். பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.