2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – சீதாராம் யெச்சூரி

0
504
general election 2019 political party Congress coalition does

general election 2019 political party Congress coalition does

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் அணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ இணையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது,

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து சி.பி.ஐ.(எம்) கட்சி கவனமாக பரிசீலித்துக்கொண்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசு நிச்சயம் வீழ்த்தப்படும்.

பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் வாக்குகளை குறிவைப்பதில் காவிக்கட்சிகள் காட்டிவரும் முனைப்புகளை முறியடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிபிஎம் மேற்கொண்டுவருகிறது.

பா.ஜ.க. அரசின் கொள்கைகளால் இந்த நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவும் பணக்காரர்கள் பணக்காரர்களாக வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் ஆளும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் பற்றி கூற வேண்டுமெனில், பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

பிஜு ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் உள்ளதா? என்று ஒரு கேள்வி எழுகிறது.

2019ஆம் ஆண்டு தேர்தலில் பிஜு ஜனதா தளக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டுமா என்பது குறித்து சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எங்கள் கட்சி ஒடிசா மாநிலக் குழு முடிவெடுக்கும்.

மாநிலத்தில் காங்கிரஸுடன் ஒரு புரிதலை சாத்தியமாக்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஒடிசாவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்ற ஒரே அணுகுமுறைதாரன் காரணம்.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை எந்த ஓர் அரசியல் அணிகளுடனோ அல்லது காங்கிரஸ் கூட்டணியுடனோ சி.பி.எம். இணையாது.

எப்பொழுமே தேர்தலுக்குப் பின்தான் முரண்பாடுகள் ஏற்படுகின்றனவே தவிர அதற்கு முன் அல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
முன்னாள் பிரதமர் தேவ கௌடா, தேர்தலுக்குப் பிறகு 1996ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி வழிநடத்தினார்.

அதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்இ 2004ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி அதை தலைமையேற்று நடத்தியது இங்குள்ள வரலாறு எனத் தெரிவித்துள்ளார்.

general election 2019 political party Congress coalition does

More Tamil News

Tamil News Group websites :